தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரெஜினா கசான்ட்ரா.இந்த படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஒன்பது வயதிலேயே ஸ்பிலாஷ் என்ற குழந்தைகள் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவ கல்லூரியில் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/r6-9.jpg)
இவர் தெலுங்கு திரையுலகில் சிவா மனசுலோ சுருதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் மூலம் இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/r5-10.jpg)
இவர் கன்னடத்தில் சூர்யகாந்தி என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.இவர் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்திருந்தார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/r4-10-819x1024.jpg)
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார்.இவர் இந்தியில் ஏக் லடுக்கி கோ தேக்கா தோ அ படத்தில் நடித்தார். இவர் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் இவர் விஷாலுடன் இணைந்து சக்ரா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/r3-12-819x1024.jpg)
இறுதியாக இவர் 1945 , ஆச்சாரியா, சாக்கின் டாக்கின் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது பார்டர், பிளாஷ் பேக், கருங்காப்பியம், சூப்ரபணகை உள்ளிட்ட 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் இப்போது ரிலீஸ் ஆவது போல தெரியவில்லை.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/r3-11-819x1024.jpg)
இந்நிலையில் ரெஜினா தான் திரைத்துறையில் அறிமுகமான புதிதில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசியுள்ளார். அதில் “ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் நிறைய வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு நபர் எனக்கு போன் செய்து, சான்ஸ் தரோம், ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓக்கேன்னா அடுத்த வேலைய பாக்கலாம் எனக் கூறினார். எனக்கு அட்ஜஸ்ட்மெண்ட்ன்னா என்னன்னு தெரியல. சம்பளத்துல அட்ஜஸ்ட்மெண்ட் என நினைத்தேன். ஆனால் அதன் பின்னர்தான் எனக்கு தெரிந்தது படுக்கையில் அட்ஜஸ்ட்மெண்ட் என.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2024/06/r2-12-819x1024.jpg)
இது போன்று சினிமாவில் எனக்கு மட்டும் இல்லை பல பெண்களுக்கு நடந்துள்ளது. நடக்காமல் கூட சிலர் பொய் சொல்லலாம். இது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்” எனக் கூறியுள்ளார்.