Friday, July 5, 2024
Home > Cinema > அமலா பால் இவ்ளோ மோசமானவரா என ஷாக் ஆனோம்… மேக்கப் வுமன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அமலா பால் இவ்ளோ மோசமானவரா என ஷாக் ஆனோம்… மேக்கப் வுமன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அமலா பாலின் சினிமா  வாழ்க்கை நேர்க்கோடாக இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடுதான் எப்போதும் இருந்துள்ளது. மைனா மூலம் பிரேக் பெற்ற அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட சறுக்கலில் மார்க்கெட்டை இழந்து காணாமல் போனார்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், அமலா பால் 2010 ஆம் ஆண்டு  வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் வித்தார்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதினை வென்றார் அமலா பால்.

பின்னர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை மைனா படத்திற்காக பெற்றார். அதன் பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தெய்வத்திருமகள்,வேட்டை காதலில் சொதப்புவது எப்படி,விஜய் நடிப்பில் தலைவா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

`

இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடை படத்தில்  நி ர் வா ணமாக சில காட்சிகளில் நடித்திருந்தார். கடந்த வருடம் வெளிவந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். இப்போது அவருக்கு கைவசம் இந்தியில் வெளியாக உள்ள போலா படம் மட்டுமே உள்ளது.

```
```

சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது ஆண்குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தங்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக மேக்கப் வுமன் ஹேமா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அதில் “அமலா பாலுக்கு மேக்கப் போடுவதற்காக ஒரு ஷூட்டிங்குக்கு சென்னைக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு நல்ல வெயில், அதனால் அவருக்கு மேக்கப் முடிந்ததும், அவரது காரவனில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என சென்றோம். ஆனால் அதைப் பார்த்த கேரவனுக்குள் செல்லக் கூடாது என சொல்லி எங்களை வெளியே வர சொல்லிவிட்டார். நாங்கள் பாலிவுட் நடிகை தபுவுக்கு எல்லாம் மேக்கப் போட்டுள்ளோம். அவர் எங்களுக்காக தனி வாகனமே அரேஞ்ச் செய்வார்” எனக் கூறியுள்ளார்.