Monday, July 8, 2024
Home > Cinema > ‘எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்குன்னு கெளப்பி விட்டாங்க’… மைக் மோகனின் சினிமா வாழ்க்கையைக் காலி பண்ணிய வதந்தி!

‘எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்குன்னு கெளப்பி விட்டாங்க’… மைக் மோகனின் சினிமா வாழ்க்கையைக் காலி பண்ணிய வதந்தி!

தமிழ் சினிமாவில் 80 களில் ரஜினி, கமல், விஜயகாந்துக்கு இணையான ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மோகன். கர்நாடகாவைச் சேர்ந்த மோகன், பாலு மகேந்திராவால் கோகிலா திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப் பட்டவர் மோகன். தமிழில் அவர் இயக்குனர் மகேந்திரனால் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனார்.

மெல்லிய உணர்ச்சி கொண்ட காதல் கதைகள் மூலம் வெற்றி கொடுத்த மோகன், சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்தார். அவரின் சூப்பர் ஹிட் படங்கள் பெரும்பாலானவற்றில் அவர் மைக் பிடித்து பாடும் பாடகனாக நடித்தார். அதனால் ரசிகர்கள் அவரை மைக் மோகன் என செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர்.

அவரின் பெரும்பாலான படங்கள் சில்வர் ஜூப்ளி கண்டன. அதனால் சில்வர் ஜூப்ளி நாயகன் எனவும் அழைக்கப்பட்டார். ஆனால் 80 களின் இறுதியில் அவர் தன்னுடைய மார்க்கெட்டில் சறுக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவரின் மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்த எஸ் என் சுரேந்தரின் டப்பிங் குரல் அவரிடம் இருந்து விலகியதும் நடந்தது.

`

அதன் பின்னர் குறைந்த அளவிலான படங்களில் நடித்து வந்த அவர் கடைசியாக நடித்த திரைப்படம் உருவம். அந்த படத்தில் அவர் அகோரமான முகத்தோற்றம் கொண்ட ஒருவராக நடித்திருந்தார். அந்த படம் தான் அவரின் கடைசி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்கவில்லை.

அதற்கு முக்கியக் காரணம் அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது என ஒரு வதந்தியை சிலர் வேண்டுமென்றே பரப்பியதுதான் காரணமாம். அந்த வதந்தி வேகமாகப் பரவி மோகன் எய்ட்ஸ் நோயால் இற்ந்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு சென்றுவிட்டதாம். அதனால் மோகனின் ரசிகர்கள் அதிர்ச்சியாகி அவர் வீட்டுக்கே வந்துவிட்டார்களாம்.

```
```

ஆனால் இந்த வதந்திக்கு மோகன் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்தார். இப்போது அவருடைய 68 ஆவது வயதில் ஹரா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். இந்த பட்ம் ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.